2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை

Princiya Dixci   / 2021 மே 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நேற்று (03) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பில் வைத்து நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மேற்படி பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டிய நியாயத்தை அமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளதுடன், தேவையான  எழுத்து மூலம் ஆவணங்களையும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சமர்ப்பித்தார்.

இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட அமைச்சர், இது குறித்து தான் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக நாம் பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பல முயற்சிகளை தொடர்ச்சியாக  மேற்கொண்டுவந்துள்ளோம்.

“மேலும், அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ மூலமும் முன்னெடுப்புக்களை  தொடர்ந்தவண்ணமே இருக்கின்றோம்.

“பல விமர்சனங்களையும் விசமத்தனங்களையும் தாண்டி, கல்முனை வாழ் தமிழ் மக்களின்  நியாயமான நீதியான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அது நிச்சயமாக தற்போதைய அரசாங்கத்தால் முடியும்.

“பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. கல்முனை வடக்கு தமிழ்  பிரதேச செயலக தரமுயர்த்தலில் எமது முயற்சி  தொடரும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .