Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாகப் பிரதேச செயலாளரின்றி, ஏறாவூர் நகர பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பிரதேச செயலகத்துக்குப் புதிய பிரதேச செயலாளர் இதுவரையில் நியமிக்கப்படாத நிலையில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா தொடர்ந்து நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராகக் கடந்த ஜுன் முதலாம் திகதி இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார்.
இதனை அடுத்து, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கு மிக விரைவில் பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என, ஏறாவூரிலுள்ள பொதுநல அமைப்புகள்; வேண்டுகோள் விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025