2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பிளாஸ்டிக் போத்தல்களை விலைக்கு வாங்க நடவடிக்கை

Editorial   / 2018 ஜூன் 03 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

கழிவாக வீசப்படும் பிளாஸ்டிக் வெற்றுப் போத்தல்கள் விலைக்கு வாங்கப்பட்டு, அவை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளனவெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை நிலையியற் குழுக்களின் சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன், திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து, சூழலைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து, அவர் இன்று (03) ஊடகங்ளுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இச்செயற்றிட்டத்துக்கு நிதி அனுசரணை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆசிய பவுண்டேஷன், பெய்ரா குறூப், மட்டக்களப்பு மாநகர சபை என்பனவற்றால், விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், அவ்வொப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர், மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில், இது தொடர்பான வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மக்கள் கழிவுகளாக வீசும் பிளாஸ்டிக் போத்தல்களை, ஒரு கிலோகிராம் 20 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கானத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதெனவும் தெரிவித்தார்.

மேலும், கழிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்ளைச் சேகரிப்போரை ஊக்குவிக்கும் நோக்கோடு, அவர்களுக்கு மேலதிகமாக ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X