Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 05 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, புனாணை மேற்குக் கிராம அலுவலர் பிரிவிலுள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
புனாணை மேற்குக் அலுவலர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை, சாளம்பச்சேனை, அணைக்கட்டு, முள்ளியவட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 230 குடும்பங்கள் பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகின்றன.
இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையில், மயிலந்தனை சனசமூக நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
இதன்போது, மேற்படி கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள்; கேட்டறியப்பட்டன.
குடிநீர் பிரச்சினை, யானைகளின் தொல்லை, வீதி விளக்குகள் இன்மை, விளையாட்டு மைதானம் இன்மை, வீதிகள் செப்பனிடப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை இக்கிராமங்களிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.
குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் தாம் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்த அம்மக்கள், சில தினங்களில் மாத்திரமே ஓட்டமாவடிப் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்படுகின்றது. அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் தங்களுக்கு போதாமையாக இருப்பதால், மிகத் தூரத்திலுள்ள குளத்தில் குடிநீரைப் பெற்று வருவதாகவும் கூறினர்.
அத்துடன், இக்கிராமங்களில்; யானைகளின் தொல்லை தொடர்ச்சியாகக் காணப்படுவதுடன், வீதி விளக்குகள் பொருத்தாமையால் மாலை வேளைகளில் பயணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் அம்மக்கள் கூறினர்.
அம்மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த மாகாணசபை உறுப்பினர், ஒரு வருடத்துக்குள் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதுடன், அதுவரையில் புதிய நீர்த்தாங்கிகளை வைத்து குடிநீர் வழங்குவதாகவும்; மாகாணசபை உறுப்பினர் கூறினார்.
அத்துடன், வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையும் உடனடியாக முன்னெடுக்கப்படும். வீதிகளைச் செப்பனிடுவதற்கு நிதி பெறப்பட வேண்டியுள்ளது என்பதுடன், யானை வேலிகளும் அமைக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025