2025 மே 08, வியாழக்கிழமை

புதிய உதவி பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தக் கடமையேற்பு நிகழ்வு, மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நேற்று (01) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் உதவி பொலிஸ் மா அதிபராக இதுவரை கடமையிலிருந்த கபில ஜெயசேகரா, 2019 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஒய்வுபெற்றுச் சென்றிருந்தார்.

அதன்பின்னர் அந்த வெற்றிடத்துக்கு உதவிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க கடமைகளைப் பெறுப்பேற்று, அவரும் 2019 டிசெம்பர் 30ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

அதனையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு உதவிப் பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன நியமிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X