2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதிய காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் ஓட்டமாவடியில் மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி, றிஸ்வி நகரில் வைத்து காணாமல் போன சிறுவன், ஓட்டமாவடியில் வைத்து இன்று (13) மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி, றிஸ்வி நகரைச் சேர்ந்த 9 வயதுடைய எம்.எம்.றிஸ்னி எனும் சிறுவனை, நேற்று (12) பிற்பகளில் இருந்து காணவில்லையென, அச்சிறுவனின் குடும்பத்தினர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த சிறுவன், அஸர் தொழுவதற்காக றிஸ்வி நகர் பள்ளிவாசலுக்குச் சென்ற நிலையில் வீடு வர வில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சிறுவனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் ஓட்டமாவடியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். சிறுவனின் தாயும் தந்தையும் பிரிந்து வாழும் நிலையில் சிறுவனை, தந்தை அழைத்துச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

சிறுவனின் தந்தை, ஓட்டமாடியில் வசிப்பதால் சிறுவனை ஓட்டமாவடிக்கே அழைத்துச்  சென்றுள்ளார் என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தையும் தாயும் சட்ட ரீதியாக பிரிந்துள்ள நிலையில், சிறுவன் பல வருடங்களாக தந்தையின் பராமரிப்பிலேயே வசித்து வந்துள்ளார். எனினும், தாயிடம் சிறுவன் வந்து சில மாதங்களே கடந்த நிலையில், தாய்க்குத் தெரியாமல் சிறுவனைத் தந்தை தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .