Freelancer / 2021 ஜூன் 13 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் “யூகே வேரியன்” எனப்படும் அல்பா வேரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“யூகே வேரியன்” எனப்படும் அல்பா வேரியன் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டு, ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கல்லடியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக, மற்ற இடங்களில் இல்லையென்று சொல்லமுடியாது. மட்டக்களப்பின் வேறு பகுதிகளிலும் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளது.
மேலும் பொதுமக்களை அவதானமாகவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறும், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
M
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025