2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதிய நிர்வாகத் தெரிவு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்; புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொள்வதற்கான  பொதுச்சபைக் கூட்டம்> எதிர்வரும் 30ஆம்; திகதி காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெறும் என> அச்சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த நிர்வாகத்துக்கான கால எல்லை முடிந்துள்ளதால்> புதிய நிர்வாகத்தை  தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்தச் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு காத்தான்குடியிலுள்ள பிரதான மூன்று ஜும்ஆப் பள்ளிவாசல்களான காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜும்ஆப் பள்ளிவாசல்> காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசல்> காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவர்களே சுழற்சி முறையில்; தெரிவு செய்யப்படுகின்றார்கள். 

அவ்வாறே> செயலாளர் பதவிக்கும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையால் நியமிக்கப்படுபவருக்கே வழங்கப்படும். பொருளாளர் பதவி புதிய காத்தான்குடியிலுள்ள மூன்று ஜும்ஆப் பள்ளிவாசல்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றது.

நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அவசரக் குழு உறுப்பினர்கள் தெரிவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

இப்புதிய நிர்வாகம் ஒருவருட காலத்துக்கே செயற்படும் எனவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X