2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய 5 பேர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில். புதையல் தோண்டிய ஐவரை கைது செய்துள்ளதாக, வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹமட் நஸீர் தெரிவித்தார்.

நேற்று (24) மாலை 6.30 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற போது, புதையல் தோண்டிய இடத்தைச் சுற்றிவளைத்து சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், புதையல்தோண்ட பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X