2025 மே 10, சனிக்கிழமை

புலிபாய்ந்தகல் வீதியை புனரமைக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

கிரான் கோறளைப் பற்று தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள புலிபாய்ந்த கல் பிரதான வீதியினை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள்  இன்று    கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் வீதியானது குண்றும் குழியுமாக காணப்படுவதனால்,  போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கும்   பிரதேச மக்கள்,  கர்ப்பிணித்  தாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் இவ் வீதியில் பயணிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும்தெரிவித்தனர்.இதேவேளை,  விவசாயிகள்  அறுவடைக் காலங்களில் தங்களது நெல் மூடைகளை உழவு இயந்திரத்தில் கொண்டுச் செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக கிரான் பிரதேசச்  செயலாளர் அலுவலகம், சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகம் உட்பட பல அலுவலகங்களுடாக,   பிரபல்லியமிக்க கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயம் போன்றவற்றிக்கு சென்று வருவதற்கு இவ் வீதியூடாகவே பயணிக்கவேண்டியுள்ளதுடன், இப் பிரதேசத்தில் 14 பாடசாலைகள் அமைந்துள்ளன. அங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களும் இவ் வீதியினை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

 புலிபாய்ந்த கல் வீதியின்  குறைபாடு தொடர்பாக பல தடைவகள் பிரதேச அபிவிருத்திக்  குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரை இதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதே பிரதேச மக்களின்கவலையாகும். இதே வேளை, இவ் வீதியானது  நீர்ப்பாசன திணைக்களத்திற்குரியதா அல்லது  வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதா என்ற குழப்ப நிலை காணப்படுவதாகவும் இவர்களது இழுபரி நிலையே இவ் வீதி இவ்வாறு காணப்படுவதற்கு காரணம் என்றும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X