Freelancer / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகைக்காடு நிருபர்
மருதமுனையின் முதலாவது பள்ளிவாசலான மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மாப்பள்ளிவாசலின் 99 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் நேற்று முன்தினம் (06) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.
மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் எப். எம். அஹமதுல் அன்சார் மொளலானா (நழீமி) தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், உலமாக்கள் கலந்து கொண்டு விசேட மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளனர்.
நிகழ்வின் ஆரம்ப உரையை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம் முகர்ரப் நிகழ்தினார். செயலாளர் ஏ.ஏ புழைல், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், மரைக்காயர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர் R
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago