2025 மே 22, வியாழக்கிழமை

பூட்டிய அறையில் ஆணின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை, நேற்றுத் திங்கட்கிழமை மாலை மீட்டெடுத்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் ஸ்ரீதர் (வயது 55) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சடலம், அவரது வீட்டின் வழிபாட்டு அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவர் மதுபோதையில் இருந்த நிலையில், வழிபாட்டறையைத் தாழிட்டுக் கொண்டு நெடு நேரமாக வெளியே வராமல் இருநதுள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் தாழிடப்பட்டிருந்த அறையின் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, சடலமாகக் கிடந்ததாக உறவினர்கள், பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .