2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண் அடித்துக் கொலை

Princiya Dixci   / 2021 மே 27 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் கசிப்பு வாங்கச் சென்றவரின் தலைக்கவசம் காணாமல் போனமையால் ஏற்பட்ட பிரச்சினையில் குடும்பப் பெண்ணொருவர், நேற்றிரவு (26) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலை, உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அதேவேளை, பெண்ணைத் தாக்கிய இருவர் மீது அப்பெண்ணின் உறவினர்கள் கத்திக்குத்து மேற்கொண்டதில், 60 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஆயித்தியமலை பொலிஸார்  தெரிவித்தனர்.  

மேற்படி இரு குடும்பங்களுக்குமிடையே நீண்டகாலமாக சண்டை இடம்பெற்றுவந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தடவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X