2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பெண்களுக்கான செயலமர்வு

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

  வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டுவந்த பெண்களுக்கு, நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசே செயலமர்வு, நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

நிலைமாறுகால நீதியின் கீழ் புலம்பெயர்ந்துச் சென்று பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட பெண்களுக்கான உரிய நட்ட ஈடுகளையும் அவர்களுக்கான நீதியையும் பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்த செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில், இந்த செயலமர்வு மட்டக்களப்பு இணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

புலம்பெயர் தொழிலாளர்களின் வலைப்பின்னலின் இணைப்பாளர் ராகினி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யுத்தத்தில் பெண்கள் தங்களுடைய குடும்ப உறவுகளையும் பிரதான தொழிலாளிகளையும் இழந்த நிலையில் மிகவும் வறுமையின் நிமித்தம் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெறுவதற்காக, மத்திய கிக்கு நாடுகளுக்கு செல்லுகின்ற நிலையில் அங்கு பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

அவ்வாறு துன்பங்களை எதிர்கொண்டு மீண்டும் இலங்கை வந்தவர்களுக்கு இந்த நல்லாட்சியில் எவ்வாறு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுப்பது, அவர்களுக்கான நட்ட ஈட்டை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மீண்டும் அவர்கள் வெளிநாடு செல்லாமல் உள்ளூரில் தங்கது வருமானத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலும், இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கையில் இருந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்டுவந்த மட்டக்களப்பு மாவட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வலைப்பின்னலில் உள்ள 30க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த செயலமர்வில் பங்குகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .