2025 மே 19, திங்கட்கிழமை

‘பெண்ணுக்கே உங்களது வாக்குரிமை’

வா.கிருஸ்ணா   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பின்னர் பெண்களுக்கான தனிக்கட்டமைப்பை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டுமே கொண்டுள்ளது” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபைக்கான வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடையில் அவரது அலுவலகத்தில் நேற்றுக் காலை ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“வட, கிழக்கில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரைக்கும் மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

“கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கிழக்கில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்கள் உள்ளனர்.

“நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கே உங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X