2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பெண்ணை தாக்கிவிட்டு நகைகள் கொள்ளை

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டினுள் கைத்துப்பாக்கியுடன் உள் நுழைந்த கொள்ளையன் பெண்ணின் தலையில் துப்பாகியால் தாக்கிவிட்டு அவரின் கழுத்தில் இருந்த 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம்   வெள்ளிக்கிழமை (14) பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி மீகவர் இலாகா வீதியில் குறித்த பெண்ணின் கணவர் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த பெண் இரவில் தாயாரின் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு வந்து தங்கி நின்று செல்வது வழமை.

இந்த நிலையில் சம்பவதினமான  பகல் ஒரு மணியளவில் குறித்த பெண், வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது அங்கு கைத்துப்பாக்கியுடன் உள்நுழைந்த கொள்ளையன் கைத்துப்பாகியால் பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு அவரின் கழுத்து மற்றும் கைகளில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளான்.

இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கொள்ளையனின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை  அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .