2025 மே 08, வியாழக்கிழமை

பெப். 1 வரை மணல் அகழ்வை நிறுத்த தீர்மானம்

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வதை, இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பது என, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில், மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மணல், மண் உட்பட கனிய வளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், ஏற்றிச்  செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர்,  திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2020 பெப்ரவரி 01  வரை மணல், மண் அகழ்வதை நிறுத்திவைக்குமாறு, இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X