2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பேச முடியாத சிறுவனை பேச வைக்க சத்திரசிகிச்சை

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாய் பேச முடியாத சிறுவன் ஒருவனை பேச வைப்பதற்காக, அச்சிறுவனுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  சத்திர சிகிச்சை புதன்கிழமை  (5) மேற்கொள்ளப்பட்டது, என அவ்வைத்தியசாலைத் தகவல்கள்  தெரிவித்தன.

ஏறாவூர், பணிக்கர் வீதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய முஹம்மட் பர்வீஸ் என்ற சிறுவனுக்கே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கான வைத்திய  சத்திர சிகிச்சை நிபுணர், nhக்டர் எஸ்.ஜீவதாஸ் தலைமையில், கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்தியர்கள் குழுவினர் இந்தச் சத்திர சிகிச்சையை மேற்கொண்டனர்.

பிறப்பிலிருந்து  வாய் பேச முடியாமல் காணப்பட்ட  இந்தச் சிறுவனுக்கு பேச வைப்பதற்காக இந்தச் சத்திர சிகிச்சை ஆறரை மணித்தியாலயங்களாக மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாகவும் முடிந்துள்ளது. இந்தச் சிறுவனால் படிப்படியாக வாய் பேச முடியும் எனவும் அத்தகவல்கள் தெரிவித்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X