2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பேஸ்புக் விவகாரம்: எட்டுப் பேருக்குப் பிணை; ஒருவருக்கு விளக்கமறியல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் போலி பேஸ்புக் கணக்கால் இடம்பெற்ற பிரச்சினையில் கைதுசெய்யப்பட்ட 9 பேரில், 8 பேர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 பேரும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நேற்று (15) ஆஜர்படுத்தப்பட்ட போது, அதில் 8 பேர், தலா 20,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.

9ஆவது சந்தேகநபர், 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

போலி பேஸ்புக் கணக்கொன்றை நடத்தி, அதன்மூலம் பலரின் புகைப்படங்களைப் பிரசுரித்ததுடன், பலரை விமர்சித்து வந்ததாகவும் தெரிவித்து, இரண்டு இளைஞர்கள் மீது, சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அவ்விரண்டு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையால், இளைஞன் ஒருவரின் தாயாரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 4 பேர் காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார், தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .