Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு நகரத்தில், மிக நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்ட இந்நிலையில் காணப்படும் பொது நூலகக் கட்டடத்தின் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க யாரும் முன்வராத நிலையில், கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய இணங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், இன்று (20) தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரத்தில் பாட்டாளிபுரம் மைதானத்துக்கு அருகில் புதிய பொது நூலகக் கட்டடம் ஒன்று, நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில், அபிவிருதிப்பணிகள் மிக நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுக் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்நூலக கட்டடத்துக்குரிய மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் அனுப்பி வைக்குமாறும், அமைச்சர் பைசர் முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார்.
“மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொது நூலகக்கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க நான் முழு முயற்சியையும் எடுத்து வருகின்றேன். பேச்சுகளோடு மட்டமல்லாது, எமது பிரதேசத்தைச் சகலவழிகளிலும் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இப்பொதுநூலகக் கட்டடம் முற்றுமுழுதாக கட்டிமுடிப்பதற்கு 165 மில்லியன் ரூபாய் தேவை. தற்போதைக்கு இதன் கீழ் தளம் கட்டி முடிப்பதற்கு 65 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.
“மேலும், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூலம், மட்டக்களப்பில் வீதி அபிவிருத்திக்காக 90 மில்லியன் ரூபாயும், நெடுஞ்சாலைகள் அமைசின் மூலம் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ள 40 மில்லியன் ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .