Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 30 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில், தலைவர் தெரிவின் போது குழப்ப நிலை காரணமாகக் கைகலப்பு ஏற்பட்டதால், தலைவர் தெரிவு பிற்போடப்பட்டு, ஏனைய பதவிகளுக்குரியவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
காத்தான்குடி, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2018ஆம், 2019ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான பொதுச் சபைக் கூட்டம், காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில், நேற்று (29) மாலை நடைபெற்றது.
சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகி, சம்மேளனத்தின் கடந்த பொதுக் கூட்டறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டன.
இதையடுத்து, தலைவர் தெரிவின் போது, சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான தலைமைப் பதவிக்கு, காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தைச் சேர்ந்த ஜௌபர் என்பவர் முன்மொழியப்பட்டிருந்தார்.
எனினும், அவரைத் தலைவராக்க வேண்டாம் எனச் சிலர் கூறியதையடுத்து, கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டு, சிலருக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது.
இதனால், தலைவர் பதவியை விடுத்து, செயலாளர், பிரதித் தலைவர், உப தலைவர்கள், பொருளாளர், உப பொருளாளர், கணக்காளர் போன்ற பதவிகளுக்கான தெரிவுகள் சுமுகமாக இடம்பெற்றன.
சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு, வேறு ஒருவரை காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தெரிவுசெய்து தரும் வரை, சம்மேளனத்தின் தற்காலிக தலைவராக தற்போதைய உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் செயற்படுவார் என, இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025