Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
முழு இலங்கையிலும் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி ஊடாக பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இன்று (04) எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த 4 நாட்களாக இரவு பகலாக வாகனங்கள் சகிதம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டது.
இரவு பகலாக பொதுமக்கள் காத்துக் கிடந்தமையினை உணர்ந்த மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும், மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான முத்துக்குமார் செல்வராசா பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட 6600 லீற்றரில் அதிகளவிலான பெற்றோலினை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 95 ஒக்டேன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருமாருக்கும், எரிபொருள் இன்றி தமது சேவையை வழங்க முடியாதிருந்த மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 100 பேருக்கும், விவசாயிகள் 50 பேரிற்கும், மிக நீண்டகாலமாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் தமது கடமையினை செய்ய முடியாமல் பல்வேறு கஸ்டத்தினை அனுபவித்து வந்த மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரனை அதிகாரிகளுக்கும், விசேடமாக முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்கியமையானது சிறந்ததொரு மனிதாபிமான செயற்பாடாக மட்டக்களப்பு மக்களால் பார்க்கப்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரான முத்துக்குமார் செல்வராசா அவர்களுக்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரிகள், விவசாயிகள உள்ளிட்டோரினால் பாராட்டி நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
44 minute ago
1 hours ago