2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பொதுமக்கள் கூடுமிடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முன்னாயத்த பாதுகாப்பு நடவடிக்கையாக, காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தின் கீழ் வரும் பொது நூலகம், சிறுவர்களுக்கான வாசிப்பு பகுதி, கடற்கரையிலுள்ள சிறுவர் பூங்கா, வாவிக்கரையோர சிறுவர் பூங்கா என்பன மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பான பொது அறிவித்தல்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி நகர மேயர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (17) தகவல் வெளியிட்ட அவர் கூறியதாவது, “கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் சகல வித முன்னாயத்தங்களையும் காத்தான்குடி நகர சபை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஓர் அம்சமாக பொதுமக்கள் கூடும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துள்ளோம்” என்றார்.

“அதேவேளை, பொதுமக்கள் அநாவசியமாக பொது இடங்களிலோ வீடுகளிலோ கூடுவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறும், வெளியில் சென்று வீடு திரும்புபவர்கள் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுமாறும் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனத்தில்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X