2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பொருளாதார வீழ்ச்சிக்கு பெரும் பங்கு…

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் பிரதம நூலகர் க .வரதகுமார் தலைமையில், நேற்று (15) நூலக கேட்போர்கூடத்தில் சிறப்புப் பட்டிமன்றமும் பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.

நிகழ்வில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் அரசியல்வாதிகள் எனவும்  மறுதரப்புவாதமாக அரசியல்வாதி அல்ல எனவும் வாதிட, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி, உவர்மலை விவேகானந்தா கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நடுவர்களாக திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் வெ. இராஜசேகர், அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணி சி.ஐஸ்வர்யா இவர்களோடு நிகழ்வின் வளவாளராக நீதிமன்ற முதலியார் எஸ். கமலும் கலந்து சிறப்பித்தார்கள். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X