Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் பாதுகாப்புக்காக ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும். ஆனால், அவ்வாறு நமது நாட்டில் இடம்பெறுவதில்லை என, தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில், மட்டக்களப்பு - கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (29) நடைபெற்றது.
இதில், “19ஆவது அரசியல் திருத்தம் நாட்டுக்குச் சாபமா” என்ற தொனிப்பொருளில் தெளிவுபடுத்திய போதே, தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி, 2018 ஒக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்குள் யாப்பை மீறல், அரச துரோக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உயர் நீதிமன்றத்தால் 2018 டிசெம்பர் மாதம் 13ம் திகதி பெற்றுக்கொடுத்த வழக்கு தீர்ப்பின்படி உறுதியாவது ஜனாதிபதி யாப்பை மீறியுள்ளாரென்பதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago