Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின்கீழ், டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இனங் காணப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மட்டிக்கழி கிராம சேவையார் பிரிவுக்குட்பட்ட மீன்சந்தை, சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டிஹாராச்சியின் வழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கதிரொளி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் , மீனவர்கள், கோவில் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர், சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
27 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
2 hours ago