Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 30 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று, வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு வவுணத்தீவிலுள்ள பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில், இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்துக்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே, மேற்படி இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களில் தினேஸ் என்பவர், பெரிய நீலாவனைப பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பிரசன்னா என்பவர் காலியைச் சேர்ந்தவர் என்றும்; கூறப்படுகின்றது.
மேற்படி இருவரும் வைத்திருந்த துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தையடுத்து மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், ஸ்தளத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்.எஸ்.எம்;.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், வடிவேல் சக்திவேல், ஆர்.ஜெயஸ்ரீராம்,க.விஜயரெத்தினம், ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago