2025 மே 03, சனிக்கிழமை

பொலிஸ் சாவடி பொறுப்பதிகாரி மரணம்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் கட்டுப்பாட்டுப் பொலிஸ் நிலையத்தின் கீழ் வரும் சந்திவெளியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சாவடிக்கான பொறுப்பதிகாரி உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சுகவீனம் காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உப பொலிஸ் பரிசோதகரும் சாவடிக்கான பொறுப்பதிகாரியுமான  கபுரு பண்டாகே தனபால (வயது 52) மரணித்துள்ளார்.

பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம், நேற்று (09) அவரது சொந்த ஊரான நொச்சியாகமவுக்கு கொண்டு செல்லப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X