Princiya Dixci / 2021 மார்ச் 11 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று (11) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முதன்முறையாக விஜயம் செய்தார்.
இதன்போது, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கந்தளாய் ஆகிய பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள 48 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக இக்கலந்துரையாடல், பிற்பகல் 02 மணிக்கு முடிவடைந்த போதிலும் குறித்த கலந்துரையாடலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


6 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago