ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமது சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் ஒரு சில ஈனத்தமான அரசியல்வாதிகள் இருந்து வருவது, மனித சமூகம் சீரழியும் அபாயம் நெருங்குகிறது என்பதை குறிப்புணர்த்துகின்றது” என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருள் சார்ந்த குற்றச் செயல்கள் பற்றி சமூகம் விழிப்பூட்டப்பட வேண்டும் என்று, இன்று (01) அவர் ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“போதைப்பொருள் பாவனையை, விற்பனையை ஒழிக்கப்பபோவதாகக் கூறிக் கொண்டு, ஒரு சில அரசியல்வாதிகள், போதைப்பொருள் பாவனையுள்ள பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
“இருந்தபோதும் இவ்வாறான பிரதேசங்களில் போதை மாத்திரை வியாபாரம் குறைந்ததாகவும் இல்லை. வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்தவர்கள் திருந்தியமாகவும் இல்லை. அவர்களுக்கெதிராக அப்பிரதேசங்களிலுள்ளவர்கள் ஊரின் நன்மைகருதி எதுவிதமான தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் இதுவரை தெரியவில்லை.
“இவை அனைத்தையும் செய்பவர்கள் பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் சில அரசியல்வாதிகள் அவர்களின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு, இளைஞர் சமுதாயம் பலியாகின்றது.
“சில அரசியல்வாதிகளும், அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களும் தங்களது அதிகாரத்தை ஒரு சமூகம் அழியும் செயற்பாட்டுக்கும், தங்களது அரசியல் இலாபங்களுக்காகவும் மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு, மனித சமூகத்தைச் சீரழிக்க போதை மாத்திரை வியாபாரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.
“இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் நமது பிரதேசங்களில் இருந்து நீக்கவிட்டால் அப்பிரதேசங்களிலுள்ள எதிர்கால அப்பாவி சமூகம்தான் என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். எனவே, போதைப் பொருளுக்கெதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்” என்றார்.
10 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago