Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் 2700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க தெரிவித்தார்
காத்தான்குடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (03) இரவு நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாலமுனை ஆரையம்பதி மைதானத்துக்கு அருகில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 2700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
இதேவேளை ஆரையம்பதி செல்வாநகர் கடற்கரை வீதியில் 2500 மில்லி கிராம் போதை ஐஸ் போதை பொருளுடன் 23 வயது பெண் ஒருவரும் காத்தான்குடி பிரதேசத்தில் 6000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 35 வயதுடைய பெண்ணொவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இரு பெண் போதைப்பொருள் வியாபாரிகளும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
ரீ. எல் ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .