Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில், கடந்த ஆண்டு 2,483 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, அபாயகரமான ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பத்ராணி சேனநாயக்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில், போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்டுள்ள அபாயங்களின் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாணத்திலும் போதைப்பொருள் குற்றங்கள் பற்றி அவர் விவரம் வெளியிட்டார்.
இதன் பிரகாரம், கிழக்கு மாகாணத்தை நோக்குமிடத்து போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்திலேயே, ஆகக் கூடுதலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் 1,110 பேரும், அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 696 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 677 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொதுவாக சிறுவர்களே, போதைப்பொருளின் இலக்காகக் கொள்ளப்படுவதாகவும், போதைப்பொருளுக்கு இலக்காக்கப்படும் சிறுவர்களின் இந்த அபாய வயதெல்லை, கடந்த காலங்களில் 15 என்ற மட்டத்திலிருந்து தற்போது 11 வயது என்ற மட்டத்துக்கு இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் அபாயம் குறித்து பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட சமூக நல அமைப்புகள், ஆர்வலர்களும் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago