2025 மே 02, வெள்ளிக்கிழமை

போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் காலமானார்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, க.விஜயரெத்தினம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமேதரம் மனோகரன், நேற்று (24) மாலை காலமானார்.   மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் இறக்கும் போது வயது 45ஆகும்.

இவர், சங்கர்புரம் கிராமத்திலுள்ள தனமு வீட்டிலிருந்து றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் சென்று பார்த்தவேளை அவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.

பின்னர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளாரென,  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனோகரன், நெஞ்சு வலி தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்திருக்கலாமென, உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

மரணத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணம், பிரதே பரிசோதனையின் பின்னர்தான் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சடலம், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தாமோதரம் மனோகரன், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சின்னவத்தை வட்டாரத்தில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X