Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
முச்சக்கரவண்டிகளை மாகாண சபையில் பதிவுசெய்து பத்திரம் வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் புதிய நடைமுறையின் மூலம் முச்சக்கரவண்டிச் சாரதிகள் பல்வேறு அனுகூலங்களை அடைய முடியும் என இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப நடவடிக்கையில் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் 10 முச்சக்கரவண்டிகள் மாகாண முச்சக்கரவண்டிப் பதிவுப் பத்திரத்தில் பதிவுசெய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் அலுவலகங்களில், பொலிஸ் நிலையங்களில் மற்றும் இன்னோரன்ன திணைக்களங்களில் நம்பகத்தன்மை பேணப்படுவதுடன், மாகாண சபையில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டியாக இருப்பதால், முச்சக்கரவண்டிப் பயணிகள் மத்தியிலும் நம்பகத்தன்மை ஏற்படும் என்ற காரணத்துக்காக இந்த நடைமுறையை முதன் முறையாக கிழக்கு மாகாண சபை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago