2025 மே 09, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாகனங்களுக்கு வழங்கப்படும் வீதி அனுமதிப் பத்திரத்தை முச்சக்கர வண்டிகளுக்கும் பெறுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகளினால் இன்று புதன்கிழமை காந்திப் பூங்காவுக்கு எதிரே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முச்சக்கர வண்டிகள் பயணிக்கும் வீதி அனுமதி மீள்பதிவுக்கு எதிர்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் எப்பகுதியிலும் நடைமுறையில் இல்லாமல் இருக்கும் இப்பதிவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே,இந்த நடைமுறை இலங்கை முழுவதும் அமுல்படுத்தும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை இறுதியாக சேர்த்துக் கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் மகஜரொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X