Princiya Dixci / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பெரிய நீலாவணையின் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (01) மாலை, இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெரிய நீலாவணைக் கிராமத்தைச் சேர்ந்த ச. விஜயரெத்தினம் (வயது 65) என்பர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025