2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மாதிரிப் பண்ணையில் தீ

Suganthini Ratnam   / 2016 மே 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, தளவாய்ப் பகுதியிலுள்ள மாதிரிப் பண்ணை இனந்தெரியாதோரினால் சனிக்கிழமை (07) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இளைஞர்களை வலுவாக்கும் திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தால் குத்தகை அடிப்படையில் காணி பெறப்பட்டு அதில் பழமரம் மற்றும் தெங்குச் செய்கைகள், மரக்கறிச் செய்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், மகா போகத்தில் நெற்;செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த தீ காரணமாக பயன்தரு மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.

மேலும், கடந்த 30ஆம் திகதி இந்தப் பண்ணைக்குள் நுழைந்த சிலர், காவலாளியை மிரட்டி பண்ணையில் சேதத்தை  ஏற்படுத்தியிருந்ததாக குறித்த பண்ணையில் கடமையாற்றுவோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X