2025 மே 10, சனிக்கிழமை

முதலீட்டாளர் மாநாட்டுக்கு தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள்

Gavitha   / 2016 ஜனவரி 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

'கிழக்கில் முதலீடு செய்யுங்கள்' எனும் தொனிப் பொருளில் ஜனவரி 28, 29ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு, தமிழகத்திலிருந்து 125 தொழில்துறை பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது,

'கிழக்கில் முதலிடுங்கள்' எனும் சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்திலிருந்து 125 பேரும் பெங்களூரிலிருந்து 20 பேரும், டில்லி, மற்றும் மகாராஸ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து இருந்து 30 பேரும் இந்த அமர்வில்; பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை பூனேயின் கோழி உற்பத்தி நிறுவனமான வெங்கீஸ், திருகோணமலை உப்புவெளியில் முதலீடு செய்;ய முன்வந்துள்ளது. ஏனைய இந்திய நிறுவனங்கள் சூரிய சக்தி உபகரணங்கள் மற்றும் மருந்தக முதலீடுகளில் அக்கறை செலுத்துகின்றன. இது கிழக்கு மாகாணத்துக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இதேவேளை கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், கிழக்கில் வேலையில்லாதுள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்,  யுவதிளுக்கு பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று தான் நிபந்தனை விதித்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், 1.7 மில்லியன் மக்களில் இரண்டு இலட்சம் பேர் வேலையற்ற நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக 50ஆயிரம் பேர் மத்திய கிழக்கு உட்பட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களை தேடி சென்றுள்ளனர்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X