Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'கிழக்கில் முதலீடு செய்யுங்கள்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச முதலீட்டாளர்களுடன் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான முதலீடு பற்றிய மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
தனது தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு 500 க்கும் மேற்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள விவசாயம், கால்நடை, மீன்பிடி ஆகியன 70 சதவீதம் பொருளாதார வளம் சேர்க்கின்றன. பொருளாதாரத்தை ஈட்டித்தருகின்ற இந்தத் துறைகளை மென்மேலும் விருத்தி செய்வதனூடாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இளைஞர், யுவதிகளுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இம்மாநாட்டின் மூலம் பாரிய அபிவிருத்திகள் கிழக்கு மாகாணத்துக்கு கொண்டுவரப்படும். மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பில் சூழலுக்கும் இயற்கைக்கும் பாதிப்பில்லாத நவீன மாற்றங்களை கொண்டுவர வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025