2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மான் இறைச்சியை விட்டு விட்டு நபர் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு தொப்பிகல வனப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 8 கிலோகிராம் மான் இறைச்சியையும் துவிச்சக்கரவண்டியையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள கிரான் பிராந்திய அதிகாரி எஸ்.ரி.சதுன் ஹேமநாயக்க தெரிவித்தார்.

குறித்த இறைச்சியும் துவிச்சக்கரவண்டியையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைப்பற்றியதாகவும் அவற்றை இன்று திங்கட்கிழமை (14) நீதிமன்றத்தில் கையளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொப்பிகல வனப் பகுதியிலிருந்து, மான் இறைச்சி கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, மான் இறைச்சியுடன் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர், 8 கிலோகிராம் மான் இறைச்சியை அதேயிடத்தில் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X