2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முன்னாள் அரசாங்க அதிபர் காலமானார்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதன் தனது 81ஆவது வயதில்  இன்று புதன்கிழமை காலை  கல்லடியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

ஆரம்பத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் மாவட்ட முகாமையாளராகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் செயலாளராகவும் அரசாங்கத்துறைகளில் இவர் பதவி வகித்திருந்தார். அத்துடன், ரோட்டறிக்கழகத்தின் முன்னாள் தலைவராகவும் புற்றுநோய்ச்சங்கத்தில் நிர்வாக உத்தியோகஸ்தராகவும் பொதுப்பணிகளிலும் இவர்  கடமையாற்றியுள்ளார்.

இவரது இறுதிக்கிரியை நாளை வியாழக்கிழமை  மாலை கல்லடியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X