Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (25) இரண்டு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் மேயராக இருந்த காலத்தில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள கட்டடமொன்றை உடைத்துள்ளார்.
இதற்கு எதிராக அக்கட்டட உரிமையாளர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து மட்டக்களப்பு பொலிஸார் அது தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் கடந்த இரண்டு தவணைகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரான சிவகீர்த்தா பிரபாகரணை நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு, நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்த போதிலும் குறித்த தவணைகளுக்கு இவர் ஆஜராகவில்லை.
எனினும், இன்று திங்கட்கிழமை (25) குறித்த வழக்குக்கு இவர் ஆஜரானபோது இரண்டு சரீரப்பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, எதிர்வரும் 10ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago