2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்  சிவகீதா பிரபாகரன் உட்பட 04 பேரை எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் உட்பட 03 பெண்களும் ஆண் ஒருவரும் நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை -மட்டக்களப்புப் பிரதான வீதியிலுள்ள முன்னாள்  மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் பாலியல் தொழிலை நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மேயரும் அவரது கணவரும் உட்பட 09 பேர், மட்டக்களப்பு பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டனர்.

இதனை அடுத்து, இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் நிலையில், முன்னாள் மேயரின் கணவர் உட்பட 05 பேர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X