2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பொதுச்சந்தையில் சுகாதார விதி முறைகளை மீறி மீன் விற்பனையில் ஈடுபட்டுவந்த வியாபாரிகளுக்கு அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.குபேரன்; நேற்று ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்தைக்கு திடீரென்று அவர் வந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீன்களை வெறும் நிலத்தில் வைத்து விற்பனை செய்தமை, மீன்களை குவித்துவைத்து விற்பனை செய்தமை உள்ளிட்ட சுகாதார விதி முறைகளை மீறி மீன்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார விதி முறைகளை மீறுவதினால் ஏற்படும் தீங்குகள் தொடர்பிலும் சுகாதாரப் பரிசோதகர் எடுத்துரைத்தார்.
இப்பொதுச்சந்தையில் வைத்து வெற்றிலை உட்கொள்ளுதல், அதைத் துப்புதல் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதனைக் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்;டார். எதிர்காலத்தில் சுகாதார விதி முறைகளை மீறும் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X