2025 மே 08, வியாழக்கிழமை

மின்விளக்கில்லாத சைக்கிள்களை செலுத்திய 30 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மின்விளக்குகளின்றி சைக்கிள்களை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 30 பேர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு எச்சரிக்கப்பட்டு உடனையே விடுவிக்கப்பட்டதாக பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, செங்கலடி மற்றும் ஏறாவூர்ப் பிரதேசங்களில் கடந்த வெள்ளி (27) மற்றும் சனிக்கிழமைகளில் (28) இரவு வேளைகளில் ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களின் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சைக்கிள்கள் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. 14 தினங்களுக்குள் இந்தச் சைக்கிள்களுக்கு மின்விளக்குகளைப் பொருத்தி சைக்கிள்களை பெற்றுக்கொள்ளுமாறு உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சைக்கிள்களுக்கு மின்விளக்குகளைப் பொருத்தி மீளப் பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் உரியவர்களை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் கூறினர்.   

வீதி விபத்துகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மின்விளக்குகளின்றிப் பயணித்த  பலரை எச்சரித்தபோதிலும், தொடர்ந்து மின்விளக்குகளின்றி சைக்கிள்கள் செலுத்திச் செல்லப்பட்டன. இந்நிலையிலே, மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X