2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 116 குடும்பங்கள் தங்களின் சொந்த இடங்களில் இதுவரையில் மீள்குடியேற்றப்படவில்லையெனவும் தங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மாட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) மாலை தன்னைச் சந்தித்த  மேற்படி மக்கள் இக்கோரிக்கையை  முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு யுத்த சூழலின்போது, தங்களின் இருப்பிடங்களை விட்டு இம்மக்கள் வெளியேறியிருந்தனர்.

முறக்கொட்டாஞ்சேனையிலுள்ள பாடசாலைக் கட்டடமொன்றில்; இராணுவம் முகாம் உள்ளது. இதனால், இப்பாடசாலையைச் சூழவுள்ள 40 குடும்பங்கள் மீள்குடியேற முடியாதுள்ளனர்.

இதேவேளை, கிரான் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்படாமை காரணமாக 76 குடும்பங்கள் மீள்குடியேற முடியாதுள்ளனர்.

இவர்களை வேறிடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதிலும், தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X