Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 08 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளை விரைவில் அபிவிருத்தி செய்யும் விசேட திட்டமொன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், அதற்கான நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மாவட்டத் திட்டமிடல் பிரிவின் 2015ஆம் ஆண்டுக்கான இறுதித்திட்ட மீளாய்வுக் கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு 2,230 மில்லியன் ரூபாய் செலவில் 4,334 அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டன. மேலும், கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு செய்திருந்தது. இதனால், இலங்கையில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டது' என்றார்.
இக்கூட்டத்தின்போது, கடந்த வருடத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கோறளைப்பற்று வடக்கு, மண்முனை வடக்கு, மண்முனை தென்னெருவில்பற்று ஆகிய பிரதேச செயலக திட்டமிடல் பிரிவுகளின் அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திட்டமிடல் பிரிவின் கணக்காளர் எம்.பசீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திட்டமிடல் பிரிவுகளின் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago