Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
முச்சக்கரவண்டிகளை மீள்பதிவு செய்வதை இரத்துச் செய்யுமாறு கோரி முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி குட்வின் சந்தியில் ஆரம்பமாகிய பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம்வரை சென்றது. இதன் பின்னர், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை காத்தான்குடிப் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் கையளித்தனர்.
அத்துடன், இது தொடர்பான மகஜரை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தபாலில் முச்சக்கரவண்டிச் சாரதிகள் அனுப்பி வைத்தனர்.
முச்சக்கரவண்டிச் சாரதிகளை மீள்பதிவு செய்யுமாறு கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது முழு நாட்டுக்கும் கொண்டுவரப்படாமல், கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இந்த நடைமுறை உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டுமென முச்சக்கரவண்டிச் சாரதிகள் தெரிவித்தனர்.
'கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தவுள்ள முச்சக்கரவண்டிப் பதிவை நிறுத்து', 'கிழக்கு மாகாண முதலமைச்சரே இது உங்களின் கவனத்துக்கு', 'வேண்டாம் வேண்டாம் முச்சக்கரவண்டிக்கு மீள்பதிவு' உள்ளிட்டவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago