2025 மே 09, வெள்ளிக்கிழமை

மீள்பதிவு திட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

முச்சக்கர வண்டிகள் மீள்பதிவு செய்வதை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை (23) காலை மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகளினால் ஆர்;ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால்; ஆரம்பமாகிய இந்த ஆர்;ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்; திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு தபாலகத்துக்கு சென்று முச்சக்கர வண்டிகளை மீள்பதிவு செய்வதை இரத்துச் செய்யுமாறு கோரிய கடிதங்களை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தபாலில் அனுப்பினர்.

முச்சக்கர வண்டி சாரதிகளை கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மீள்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'இந்த நடைமுறையானது கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்படுவது எமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது' என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

'இந்த நடைமுறையானது முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் பின்பற்றப்படுகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X