Suganthini Ratnam / 2016 மே 19 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆலய முன்றிலில் சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.
அதேபோன்று அமிர்தகழி புனித கப்பலேந்திய மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வேண்டுதலும் நடைபெற்றது.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago